Tuesday, November 19, 2013

உங்களின் Facebook Account Hack செய்யப்பட்டால் சுலபமாக மீட்க

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது Facebook தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி Account ஐ முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.



இதற்க்கு Facebook இல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக Hack செய்யப்பட Account ஐ திரும்ப பெறலாம். நீங்கள் Facebook இல் இருந்தால் sign out கொடுத்து வெளியேறுங்கள்.

பிறகு இந்த Link இல் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

https://www.facebook.com/hacked

வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ open ஆகும்.

அந்த விண்டோவில் உங்கள் Account ஐ திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி Email மூலம் மீட்பது என பார்ப்போம்).

Email  ID யை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ open ஆகும். நீங்கள் கொடுத்த Email ID யில் உள்ள Facebook கணக்கை காட்டும்.

உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த Password ஐ அந்த இடத்தில் கொடுக்கவும். Password ஐ கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த விண்டோ open ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த Gmail ID மற்றும் Password கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் Gmail இன் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இப்பொழுது புதிய Password ஐ தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் Account திரும்ப பெறப்படும்.

இனி நீங்கள் உங்கள் Facebook Account ஐ எப்பொழுது போல உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment